ETV Bharat / bharat

இன்ஸ்டாகிராம் பதிவால் உறுதியானதா சானியா - சோயிப் மணமுறிவு...? - சானியா மிர்சா விவாகரத்து

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு, அவருக்கும், சோயிப் மாலிக்கிற்கும் இடையிலான மனமுறிவை அம்பலப்படுத்துவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சோயிப் மாலிக் - சானியா மிர்சா
சோயிப் மாலிக் - சானியா மிர்சா
author img

By

Published : Nov 26, 2022, 1:28 PM IST

டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சாவுக்கும், அவரது கணவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் மன கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளன.

இதை ஆமோதிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் சானியா மிர்சா வெளியிட்ட பதிவுகளும் உறுதிப்படுத்தின. இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் அவர், நீங்கள் ஒளி மற்றும் இருளால் ஆன மனிதன். பலவீனமாக இருக்கும் நேரத்தில் உங்களை நேசிக்கவும், உங்கள் இதயம் கனமாக இருக்கும் நேரத்தில் ஓய்வு கொடுக்கவும் கற்றுக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, சானியாவும், சோயிப் மாலிக்கும் பிரியும் முடிவில் உறுதியாக இருப்பதாகவும், பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு முடிவு கிடைத்த பின் பொது வெளியில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

சானியா மிர்சா இன்ஸ்டா பதிவு
சானியா மிர்சா இன்ஸ்டா பதிவு

கடந்த சில நாட்களுக்கு முன் இதே போல் சானியா மிர்சா ஒரு பதிவை வெளியிட்ட நிலையில், அதன் பின் இருவரும் "தி மிர்சா மாலிக் ஷோவில்" ஒரு சேர பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் இம்முறையும் இருவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த சானியா பதிவு வெளியிட்டு இருக்கலாம் என மற்றொரு புறம் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சோயிப் மாலிக் - சானியா மிர்சா தம்பதிக்கு, இழான் மிர்சா மாலிக் என்ற மகன் உள்ளார்.

இதையும் படிங்க: 26/11 மும்பை தாக்குதல் - பொது மக்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி....

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.