ETV Bharat / bharat

சித்து மூஸ்வாலா கொலை: சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிப்பு

பஞ்சாபி மொழி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதையடுத்து, பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிப்பு
சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிப்பு
author img

By

Published : Jun 1, 2022, 4:05 PM IST

மும்பை: பஞ்சாபி மொழி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "சித்து மூஸ்வாலா கொலைக்கு பின்னணியில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் முக்கிய குற்றவாளியாக இருப்பதாக தகவல் தெரிகிறது. முன்னதாக, சல்மான் கான் 'ஹம் சாத் சாத் ஹேன்' படப்பிடிப்பின் போது பிளாக்பக் (Blackbuck) என்ற வகை மானை வேட்டையாடியதாக கூறப்படுகிறது.

பிஷ்னோய் சமூகத்தில் பிளாக்பக் வகை மான் புனித விலங்காக கருத்தப்படுகிறது. சல்மான் கான் அதை வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் அது அவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018ஆம் ஆண்டு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்" என்று தெரிவித்தனர்.

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி சன்னி என்ற ராகுல், விசாரணையின் போது கூறுகையில், சல்மான் கானை கொல்ல திட்டம் வகுத்ததாகவும், அதற்காக மும்பை சென்றதாகவும் கூறியிருந்தார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவற்றின் அடிப்படையிலும், சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்ட நிலையிலும் பிஷ்னோய் கும்பலின் நடவடிக்கைகளில் இருந்து சல்மான் கானை பாதுகாக்கும் வகையில் அவருக்கு வழக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாதுகாப்பை திரும்ப பெற்ற ஆம்ஆத்மி அரசு - காங்கிரஸ் பிரமுகர் சித்து மூஸ்வாலா சுட்டுக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.