டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லி, காற்று மாசுபாட்டில் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்று. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் கடும் நடவடிக்கைகள் அரசு சார்பில் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த மூன்று தீபாவளி பண்டிகையின் போது அங்கு பட்டாசு விற்பனைக்கும், பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து நான்காவது ஆண்டாக, இந்த வருடமும் பட்டாசு விற்பனைக்கும், வெடிப்பதற்கும் தடை விதித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், டெல்லி நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பட்டாசு பயன்படுத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.