ETV Bharat / bharat

சோனியா காந்தியை சந்தித்தார் பைலட்- பரபரப்பு தகவல்கள்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சந்தித்த 24 மணி நேரத்திற்குள் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் சந்தித்து பேசியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Nov 12, 2021, 3:14 PM IST

Sachin Pilot
Sachin Pilot

டெல்லி : ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் வெள்ளிக்கிழமை (நவ.12) சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு ராஜஸ்தான் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் சந்திப்புக்கு பின்னர் 24 மணி நேரத்தில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஆகையால் இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ, அதைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 20 ஆண்டுகளில், எனக்கு எந்த வேலை வழங்கப்பட்டாலும், அதை விடாமுயற்சியுடன் செய்துள்ளேன். கட்சியில் எனக்கு என்ன பங்கு உள்ளது என்பதை கட்சி முடிவு செய்யும்.

சோனியா காந்தி எங்களது கருத்துகளை கேட்டறிந்தார். அடுத்த சில நாள்களில் மறுசீரமைப்பு இருக்கலாம்” என்றார். சச்சின் பைலட்டின் இந்தக் கருத்து அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அசோக் கெலாட் அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கலகம் செய்தபோது, ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து சச்சின் பைலட்டுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. எனினும் சில நாள்களில் துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.