கொச்சி : சபரிமலை பக்தர்களின் நலன் கருதி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், மலைக்கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரிசை திங்கள்கிழமை (நவ.29) தொடங்கப்பட்டது.
கொச்சி விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் வருகை மண்டபத்தில் இந்த வரிசை அமைந்துள்ளது. இது சபரிமலை தேவஸ்தானம் சார்பாக தனலட்சுமி வங்கியால் இயக்கப்படுகிறது.
இதனை கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் தெரிவித்துள்ளது. இங்கு சபரிமலை சன்னிதானத்தில் இருந்து வழங்கப்படும் நெய்யபிஷேகம், அரவணை மற்றும் அப்பம் பிரசாதங்களுக்கான கூப்பன்கள் கிடைக்கும்.
மேலும் சபரிமலை மலையேற்றம் தொடர்பான விரிவான தகவல்களையும் யாத்ரீகர்கள் பெறலாம். இந்தக் தேவசம் போர்டு தலைவர் கே.அனந்தகோபன் கவுன்டரை திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு சியால் நிர்வாக இயக்குனர் எஸ்.சுஹாஸ் தலைமை தாங்கினார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக யாத்திரைக்காக நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. சபரிமலை கோயிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சபரிமலை நடை திறப்பு