திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை நடைபெறுகிறது. ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்படும் தங்க அங்கி இன்று பம்பையை வந்தடைகிறது. தங்க அங்கியால் அலங்கரிக்கப்பட்ட பின்னர் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை மண்டல பூஜை நடைபெற்றது.
தங்க அங்கியுடன் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு, மாலை 6.30 மணிக்கு மகா தீபாராதனை நிகழ்ச்சி நடத்தப்படும். பின்னர், 8.30 மணிக்கு நடைபெறும் பூஜைக்குப் பிறகு, ஹரிவராசனம் பாடிய பின்னர் இரவு 9 மணிக்கு கோயில் மூடப்படும்.
தொடர்ந்து, சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் கோயில் மூடப்பட்டு டிசம்பர் 30ஆம் தேதி, மகரவிளக்கு பூஜைக்காக கோயில் மீண்டும் திறக்கப்படும்.
மகர விளக்கு பண்டிகை காலம் டிசம்பர் 31 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதையடுத்து, டிசம்பர் 31ஆம் தேதி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
இதையும் படிங்க: சபரிமலையில், டிச.26 முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!