இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. தாந்திரி கந்தாரு ராஜிவாரு முன்னிலையில் மெல்சாந்தி ஜெயராஜ் பொட்டி மாலை 5 மணிக்கு கோயில் நடையை திறந்து வைப்பார்.
தொடர்ந்து வரும் ஜூன் 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷாபூஜை, உச்ச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேவஸ்தானம் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாதாந்திர பூஜை நாள்களில் கோயில் நடை திறப்பு குறித்து இறுதி செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆழம் பார்க்கும் சசிகலா - பதற்றத்தில் அதிமுக தலைவர்கள்!