ETV Bharat / bharat

கர்நாடகா வர கரோனா சான்றிதழ் கட்டாயம் - RTPCR must for Kerala Maharashtra people travelling to kerela

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

RTPCR must to enter karnataka
RTPCR must to enter karnataka
author img

By

Published : Jul 31, 2021, 7:10 PM IST

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அம்மாநிலங்களில் இருந்து கர்நாடகா வருவோர் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று கொண்டுவர வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டு மூன்று நாள்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்துக்கு வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்டிபிசிஆர் சான்றிதழ் எடுத்துவராதவர்கள் விமானத்தில் அனுமதிக்கப்படமாட்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஆர்டிபிசிஆர் சான்றிதழை எடுத்துவருவதற்கு ரயில்வே அலுவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்பவர்கள் ஒவ்வொரு 15 நாள்களுக்கும் பரிசோதனை செய்துகொண்டு சான்றிதழ் எடுத்துவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிகார் ரயில் நிலையத்திற்குள் புகுந்த நக்சல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.