டெல்லி: இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவிக்கையில், "இந்தியாவில் குரங்கம்மை தொற்று குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். இந்த தொற்று மற்ற நாடுகளில் பரவத்தொடங்கியபோதே, மத்திய அரசால் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன.
இதுவரை 7 பேருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 5 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளாவை சேர்ந்த 22 வயது இளைஞர் உயிரிழந்தார். அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மத்திய குழுவை அனுப்பி, மாநில அரசுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதோடு குரங்கம்மை நோயை கண்காணிக்க மருத்துவக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொற்றுகான தடுப்பூசிகள் தயாரிப்பது இந்தியாவில் சாத்தியமான ஒன்றுதான். இந்த தொற்று பரவலின் தன்மையின் அடிப்படையில் தேவைப்பட்டால் அதற்கான பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை