நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் இன்று (மார்ச் 8) தொடங்கியுள்ளன. இன்று காலை ஒன்பது மணி அளவில் மாநிலங்களவைத் தொடங்கியது. காங்கிரஸ் உறுப்பினர் மனீஷ் திவாரி எரிவாயு விலை உயர்வுத் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.
அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை விவதாதத்திற்கு மாநிலங்களவைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும என முழக்கமிட்டு அமளியில் ஈடுபடத்தொடங்கினர்.
கூட்டத்தொடரின் முதல் நாளே நான் கறாரன நடவடிக்கையில் ஈடுபடவிரும்பவில்லை என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர் முழக்கம் எழுப்பவே அவை மதியம் ஒரு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெண் சக்தியை தலை வணங்குகிறேன்: மோடி