ETV Bharat / bharat

குற்றவியல் மசோதா 2022 மாநிலங்களவையில் தாக்கல்!

குற்றவியல் நடைமுறை மசோதா மூலம் தண்டனை பெறும் விகிதத்தை அதிகரிக்கவே முடியும். குற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும் என அமித்ஷா மாநிலங்களவையில் தெரிவித்தார்.

குற்றவியல் மசோதா 2022 மாநிலங்களவையில் தாக்கல் - அமித்ஷா விளக்கம்!

author img

By

Published : Apr 6, 2022, 7:59 PM IST

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்.6) மாநிலங்களவையில் குற்றவியல் நடைமுறை மசோதாவை முன்வைத்தார். இந்தக் குற்றவியல் நடைமுறை மசோதா 2022 திங்கள்கிழமை (ஏப்.4) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதா 1920 இல் குற்றவாளிகளை அடையாளம் காணும் சட்டத்தின் திருத்தமாகும். இந்த மசோதா மூலம் குற்றம்சாட்டப்பட்டவரின் உயிரியல் மாதிரிகளை பரிசோதனைக்காக காவல்துறையினர் எடுக்கும் உரிமையினை வழங்குகிறது.

இது குறித்து மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘ 100 ஆண்டுகள் பழமையான குற்றவியல் சட்டத்தை தற்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டனையின் வீரியத்தை அதிகரிக்க இந்த மசோதா உதவும்.

மேலும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் நாட்டின் குற்றங்களை குறைக்க முடியும்’ எனக் கூறினார்.

தனிமனித உரிமையை பாதிக்கும்: காங்கிரஸ் எம்பியும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப சிதம்பரம் இது குறித்து கூறுகையில், ‘ இது "அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" எனவும், மக்களின் சுதந்திரம் மற்றும் தனி மனித உரிமை ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது என தெரிவித்தார்.

செல்வி மற்றும் புட்டாசாமி வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பை அரசாங்கம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை" என்றும் சிதம்பரம் குற்றஞ்சாட்டினார். மேலும் செல்வி வழக்கில், பாலிகிராபி, போதைப்பொருள் பகுப்பாய்வு மற்றும் மூளை மின் செயல்படுத்தல் விவரக்குறிப்பு (பிஏபி) ஆகிய பரிசோதனைகள் தனிநபரின் உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாக நீதிமன்றம் கூறியதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.