ETV Bharat / bharat

தெலங்கானா கைத்தறி குடோனில் தீ; ரூ.35 கோடி பொருள்கள் நாசம்! - TSCO

தெலங்கானாவில் கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் குடோனில் நேற்றிரவு (ஏப். 11) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், ரூ. 35 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாகின.

தெலங்கானா கைத்தறி குடோனில் தீ விபத்து
தெலங்கானா கைத்தறி குடோனில் தீ விபத்து
author img

By

Published : Apr 12, 2022, 12:48 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா கைத்தறி மற்றும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (TSCO)குடோன் ஒன்று வாரங்கல் மாவட்டத்தின் தர்மாராம் கிராமத்தில் உள்ளது. இந்தக் குடோனில் நேற்றிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்ட அப்பகுதியினர், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் வாரங்கல், ஹனுமாகோண்டாவில் இருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் அந்த குடோனில் ரூ. 35 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் நாசமாகியுள்ளதாக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். வாரங்கல் மற்றும் கரீம்நகர் என இரு மாவட்டங்களுக்கான தரைவிரிப்புகள், துண்டுகள், கம்பிளி போன்ற பல்வேறு வகையிலான துணிகள் இந்த குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை அனைத்தும் தீயில் எரிந்துவிட்டதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர்.

தெலங்கானா கைத்தறி குடோனில் தீ விபத்து: ரூ. 35 கோடி மதிப்பிலான பொருள்கள் நாசம்

காரணம் பீடி, சிகரெட்டா?: தீயணைப்புத் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இந்தத் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஏனென்றால், தீ விபத்து ஏற்பட்டபோது குடோனில் மின்சாரம் விநியோகத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெனும் பயன்படுத்திய பீடி, சிகரெட் அல்லது குடோனை சுற்றியிருக்கும் மரத்தில் இருந்து உதிர்ந்த காய்ந்த இலைகள் ஆகியவற்றால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், தீயணைப்பு வாகனங்கள் விரைவாக வந்திருந்தாலும், சொத்து இழப்பு குறைந்திருக்காது எனக் குடோன் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்பு துறையினர் விபத்து குறித்து கூறுகையில்,"குடோன் உரிமையாளர்கள் இதுபோன்ற தீ விபத்து குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கோடைக்காலத்தில் காய்ந்த இலைகள், வெப்பம் நிறைந்த வானிலையால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது" என்றனர்.

மேலும், நல்வாய்ப்பாக அருகில் இருக்கும் எல்பிஜி எரிவாயு குடோனில் தீ பரவவில்லை என்றும் அதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது எனவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தால், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எமனாக வந்த ரயில் சங்கிலி; ஸ்ரீகாகுளம் தண்டவாளத்தில் ஐவர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.