மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் அதிகளவில் ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக(டிஆர்ஐ) அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் டிஆர்ஐ அலுவலர்கள் துறைமுகத்திற்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் டால்கம் பவுடர் கொள்கலனிலிருந்து 290 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், ஹெராயின் மதிப்பு 300 கோடி ரூபாய் இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: விமான மூலம் ஹெராயின் கடத்தல் - இரண்டு ஆப்பிரிக்க பெண்கள் கைது!