ETV Bharat / bharat

தனியார் பைனான்ஸ் ஊழியர் மீது தாக்குதல்; ரூ. 10 லட்சம் கொள்ளை

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இயங்கிவரும் தனியார் அலுவலகத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது.

cash looted
cash looted
author img

By

Published : Jan 1, 2021, 4:18 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் அம்பே அசோசியேட் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அலுவலகத்தில் நுழைந்து நிறுவனத்தின் உரிமையாளர் அஜய் திரிவேதியை சரமாரியாக தாக்கியது.

மேலும், அலுவலகத்தில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவம் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பாதிவாகியுள்ளது. ஆனால் நிறுவனத்தின் உரிமையாளர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகியதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பின்னர் பாதிக்கப்பட்டவரை கண்டுபிடித்து, அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.