அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் ஜண்டியாலா பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சர்குலர் சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி அலுவலகத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கடைக்காரர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் ஏர் டிக்கெட் மற்றும் வெஸ்டர்ன் யூனியனில் வேலை பார்க்கிறேன். மாலையில், வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தை எண்ணி கணக்கு பார்த்துக்கொண்டிருக்கும் போது, திடீரென மோட்டார் சைக்கிலில் கடைக்கு வந்த இரண்டு வாலிபர்கள், துப்பாக்கியை வைத்து மிரட்டி ரூபாய் 2 லட்சம் மேலான பணத்தை கொள்ளையடித்து சென்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ”காவல் துறையினர் பாதுகாப்பு என்ற பெயரில் நாடகம் மட்டுமே செய்கின்றனர். இங்கு எதுவும் நடக்காது, நடக்க வேண்டியவை நடந்தேறிவிட்டன, இனி எதுவும் எதுவும் திரும்பக் கிடைக்காது” என வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தது, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கூறுகையில், “அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளோம். விரைவில் குற்றவாளியை பிடிப்போம்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேமராவுக்கு ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி! - சியூபி ஏடிஎம்மில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது