உன்னாவ்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரோ வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து உன்னாவ் போலீசார் தரப்பில், ஆக்ராவிலிருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எர்டிகா காரில் லக்னோ நோக்கி புறப்பட்டனர்.
இந்த கார் விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. அதன் காரணமாக சாலையில் மறுபுறம் சென்று லக்னோவில் இருந்து ஆக்ரா நோக்கி வந்துகொண்டிருந்த எஸ்யூவி கார் மீது நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் எர்டிகாவில் வந்த 1 குழந்தை உள்பட 5 பேரும் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர்.
எதிரே வந்த காரில் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வாகனவோட்டிகள் அளித்த தகவலின்படி சம்பயிடத்துக்கு விரைந்தோம். 5 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். அதேபோல படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.
அவர்கள் அவுராஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் 2 பேருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாலை விபத்தில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் டிஎஸ் சிங் தேவ்