டெல்லி: யமுனை ஆற்றில் அம்மோனியா அளவு அதிகரித்துள்ளதால், பல சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்படுவதாக டெல்லியின் குடிநீர் வாரியம் அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தண்ணீரில் அதிக அளவு அம்மோனியா இருப்பதால், நீர்வாழ் உயிரினங்கள் அழிந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மனிதர்களின் உட்புற திசுக்கள் மற்றும் ரத்தத்தில் நச்சுத்தன்மையை கலப்பதற்கும் இது வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. சில வேளைகளில் இது மரணத்தைக் கூட ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வஜிராபாத் குளத்தில் இருந்து வசிராபாத், ஓக்லா, சந்திரவால் சுத்திகரிப்பு நிலையங்களுக்காக நீர் எடுக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீர் பின்னர் மத்திய, தெற்கு மற்றும் மேற்கு டெல்லிக்கு வழங்கப்படுகிறது.
தற்போது ஏற்பட்டிருக்கும் இந்நிலை தொடர்ந்தால் ஆற்று நீரைப் பயன்படுத்தாத நிலை ஏற்படும். இச்சூழலில், நகர மக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி காற்று மாசு: 114 டேங்கர்களை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிப்பு!