இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். இதன்மூலம் அவர் முதல்முறையாக இந்திய வம்சாவளியினைச் சார்ந்த இங்கிலாந்து பிரதமராகவும், இங்கிலாந்தின் முதல் இந்து மதத்தைச்சார்ந்த பிரதமராகவும் அறியப்படவுள்ளார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டண்ட் போட்டியில் இருந்து விலகியதால், கட்சியின் தலைவர் ஆனார் ரிஷி. முன்னதாக இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.