ரூர்க்கி: கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு நேற்று (டிச.30) டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 5.30 மணியளவில், அவரது கார் டிவைடரில் மோதியதில் தீப்பிடித்தது. இதில் அவரது தலை, முதுகு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பந்தை, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் (DDCA) நேரில் பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் விரைவில் குணமடைய வேண்டி ட்வீட் செய்துவருகின்றனர். இதுகுறித்து பேசிய டிடிசிஏ இயக்குநர் ஷியாம் சர்மா, ‘பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ரிஷப் பந்த், தேவைப்பட்டால் டெல்லிக்குச் செல்ல வாய்ப்புகள் உள்ளது’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரிஷப் பந்த் உடல் நிலை சீராக உள்ளது - மருத்துவமனை தகவல்