இட்டா நகர்: ஆற்று நீரின் தரம், ஆற்றங்கரை அரிப்பு, மீன் வாழ்விடங்கள் குறித்த தரவு சேகரிப்பு, மாதிரி பயிற்சியை நோக்கமாகக் கொண்டு, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் "பிரம்மபுத்ரா அமந்திரன் அபியான்" என்ற திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆற்றுடன் வாழும் பயணம் என்ற கருப்பொருளில் பேசுகையில், "சுமார் 900 கி.மீ. தூரத்தை உள்ளடக்கிய இந்தத் திட்டம் இந்தோ-சீனா எல்லையிலிருந்து அப்பர் சியாங் மாவட்டத்தில் கெல்லிங்கில் தொடங்கி சியாங் ஆற்றின் குறுக்கே கிழக்கு சியாங் மாவட்டத்தின் பாசிகாட் வரை செயல்படுகிறது.
இந்தத் திட்டம் இளைஞர்களையும் மாணவர்களையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தரவு சேகரிப்பு, மாதிரி பயிற்சி பயணம் பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிப்போம்' - விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ