சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம், ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில், பிஹ்ரித் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் சாஹூ (12) என்ற சிறுவன் கடந்த 10ஆம் தேதி வீட்டின் அருகே இருந்த ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்தான்.
120 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக்கிணற்றில், 50 அடியில் சிறுவன் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. சிறுவனை மீட்கும் பணியில், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
நேரடியாக மீட்க முடியாததால், ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டி, மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழி தோண்டும் பணி தொடங்கியுள்ளது. மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா, "சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறுவனுக்கு தேவையான ஆக்சிஜன் ஆழ்துளைக்கிணற்றில் செலுத்தப்பட்டு வருகிறது. உணவு மற்றும் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. சிறுவனை பாதுகாப்பாக மீட்க அனைவரும் சேர்ந்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணற்றில் 12 வயது சிறுவன் - சத்தீஸ்கரில் மீட்புப்பணிகள் தீவிரம்