உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி திரௌபதி அம்மன் சிகரத்தில் கடந்த செவ்வாய்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு கல்வி நிறுவனத்தை சேர்ந்த சுமார் 40 பேர் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அசோக்குமார், இதுவரை 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர் மூலம் உடல்கள் மவுலி ஹெலிபேடிற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். மீட்பு பணியல் மொத்தம் 30 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன மலையேறுபவர்களைக் கண்டுபிடிக்க ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹை ஆல்டிடியூட் வார்ஃபேர் ஸ்கூல் (HAWS) வீரர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவம், ஐடிபிபி, எஸ்டிஆர்எஃப், ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மலையேற்ற பயிற்சியில் இது மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : டி-90 பீரங்கியின் குழல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு