ETV Bharat / bharat

ரஷ்யா, ஈரானுடன் கடற்படை பயிற்சியில் ஈடுபடவில்லை - இந்தியா உறுதி

இந்திய பெருங்கடல் பகுதியின் வடபகுதியில் ரஹ்யா, ஈரான் ஆகிய நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதனுடன் இந்தியாவும் இணைந்ததாக வெளியான செய்தியை இந்திய கடற்படை மறுத்துள்ளது.

author img

By

Published : Feb 19, 2021, 6:54 AM IST

Indian Navy part maritime drill false
Indian Navy part maritime drill false

டெல்லி: ரஷ்யா, ஈரான் நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியில் இந்தியா இணையவில்லை என கடற்படை தலைமை தெரிவித்துள்ளது.

நேற்று (பிப். 17), "இந்திய பெருங்கடல் பகுதியின் வடபகுதியில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2 நாட்கள் பயிற்சியானது நேற்று தொடங்கியது. இதில், ஈரான் நாட்டு கப்பல்கள் பங்கேற்றன. அவற்றுடன் ரஷ்ய நாட்டு கப்பல்களும் பயிற்சியில் கலந்துகொண்டன. இந்த பயிற்சியில் குறிப்பிட்ட வகை கப்பல்களுடன் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது என அட்மிரல் கோலம்ரிஜா தஹானி கூறியுள்ளார்" என்று செய்திகள் வெளியாகின.

தமிழில் பதவி ஏற்ற முதல் தமிழச்சி: தமிழிசை 'கை'யில் புதுச்சேரி!

மேலும், இந்த பயிற்சியில் விரும்பினால் வேறு சில நாடுகளும் கலந்து கொள்ளலாம் என அவர் கூறினார். தொடர்ந்து, “இந்த பயிற்சியானது 17 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்கள் (6 ஆயிரத்து 500 சதுர மைல்கள்) பரப்பளவில் நடைபெறும். இதில், கடலில் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொள்ளுதல், வான் பரப்பில் இலக்குகளை நோக்கி சுடுதல், கடத்தப்பட்ட கப்பல்களை விடுவித்தல், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல், கடல் கொள்ளை சம்பவங்களை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த பயிற்சியில் சீன கடற்படையும் கலந்து கொள்ளும்” என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்தது.

இச்சூழலில், இந்த செய்தி தவறானது என இந்திய கடற்படை தற்போது அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.