டெல்லி: கேரள மாநிலம் கோழிக்கூடு கிராமத்தில் பிறந்தவர் பி.டி.உஷா, இவர் பல போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளார். ஒலிம்பிக்கிலும் பதக்கங்களை பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று பி.டி.உஷா மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார்.
உஷா, சமீபத்தில் ராஜ்யசபாவுக்கு, மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டார். நேற்று(ஜூலை 19)அவர் பாஜக தலைவர் ஜேபி நட்டாவைச் சந்தித்தார். பின்னர் உஷா எம்பியாக பரிந்துரைக்கப்பட்டதற்கு நட்டா வாழ்த்து தெரிவித்தார்.
உஷா நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு விளையாட்டுகளில் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும், அது குறித்து கனவு கண்டவர்களுக்கு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் இருந்துள்ளார்.
முன்னதாக நேற்று முன் தினம் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான ப.சிதம்பரம், சி.வி. சண்முகம், கிரிராஜன், எஸ். கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரும் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.
இசையமைப்பாளர் இளையராஜா, திரைக்கதை எழுத்தாளர் வி விஜயேந்திர பிரசாத் மற்றும் ஆன்மீகத் தலைவர் வீரேந்திர ஹெக்கடே உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மாநிலங்களவையில் தமிழில் பதவியேற்ற ப.சிதம்பரம், சி.வி.சண்முகம் - ஹர்பஜனும் பதவியேற்பு