டெல்லி: பார்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த கீதாஞ்சலி ஐயர் உடல்நலக்குறைவால் நேற்று (ஜூன் 7) காலமானார். இவர் இந்தியாவில் பிரபலமான ஆங்கில பெண் தொகுப்பாளர்களில் ஒருவர் மற்றும் விருது பெற்ற தொகுப்பாளினியும் ஆவார். நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பிய பின் உயிர் இழந்ததாக அவரின் நெருங்கிய நண்பர் கூறினார்.
கீதாஞ்சலி ஐயர், தேசிய நாடகப் பள்ளியில் (என்எஸ்டி) டிப்ளமோ மற்றும் கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். 1971ல் தூர்தர்ஷனில் இணைந்த இவர், நான்கு முறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதையும் பெற்றுள்ளார். மற்றும் 1989ல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்று உள்ளார்.
செய்தி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல், பல அச்சு விளம்பரங்களில் அவர் தன்னை வெளிப்படுத்திப் பிரபலமான பெண்ணாக இருந்துள்ளார். தன்னை பன்முக கலைஞராகவும், தன்னம்பிக்கையுடன் பல வேலைகளிலும் ஈடு காட்டியுள்ளார்.
கீதாஞ்சலி ஐயர் ஸ்ரீதர் க்ஷிர்சாகரின் தொலைக்காட்சி நாடகமான "கந்தான்"விழும் நடித்து பிரபலம் ஆனார். அவர் தனது வாழ்நாளில் புகழ்பெற்ற கலைஞராக இருந்துள்ளார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட கீதாஞ்சலி ஐயர் பல சமுக அமைப்புடன் இனைந்து மக்கள் மற்றும் உயிரினங்களுக்கு உதவி புரிந்துள்ளார். உலக வனவிலங்கு நிதி (WWF) அமைப்புடன் தொடர்புடையவர்.
இதையும் படிங்க:கோபி நீதிமன்றத்தில் நகைகள் திருட்டு: நீதிபதி அதிர்ச்சி!
கீதாஞ்சலி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மகிளா காங்கிரஸ் நிர்வாகியான நெட்டா டிசோசா தனது ட்விட்டர் பக்கத்தில் கீதாஞ்சலி ஐயருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது, பதில், "கீதாஞ்சலி ஐயர் அவர்கள் எங்கள் தொலைக்காட்சித் திரைகளை அலங்கரித்த நாட்களை நாங்கள் அன்புடன் நினைவுகூர்கிறோம், எங்கள் செய்திகளைப் பார்க்கும் அனுபவங்களில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளார். அவரது அகால மறைவு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆன்மா நித்திய அமைதி பெறட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மூத்த பத்திரிகையாளர் ஷீலா பட், "இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களில் ஒருவரான கீதாஞ்சலி ஐயர், அன்பான மற்றும் நேர்த்தியான நபர் மற்றும் மகத்தான குணம் கொண்ட பெண்மணி இன்று காலமாகியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கீதாஞ்சலி ஐயருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பல்லவி ஐயர் என்ற அவரது மகளும் ஒரு விருது பெற்ற பத்திரிகையார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரயில்களை குறிவைக்கும் முயற்சியா? ரயில் பாதையில் தென்னை மரத்துண்டு வைத்த சம்பவத்தால் பரபரப்பு!