கோவாவைச் சேர்ந்த பிரபல ஓவியக் கலைஞர் லஷ்மன் பாய் நேற்று(மார்ச் 14) காலமானார். அவருக்கு வயது 95. கோவா கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த லஷ்மன் ராய் பத்ம பூஷண், நேரு விருது, லலித் கலா அகாதமி விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவரது மறைவுக்கு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ட்விட்டரில் அஞ்சலி தெரிவித்துள்ளார். அதில், கோவா இன்று தனது விலைமதிப்பற்ற ஆபரணத்தை இழந்துள்ளது. கலைத்துறையில் லஷ்மன் ஆற்றிய பங்களிப்பு அளப்பறியது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் திகம்பர் காமத், மத்திய அமைச்சர் ஸ்ரீ பத் நாயக் உள்ளிட்ட பலர் லஷ்மனின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தில் ஸ்ட்ராபெரி பயிரிட்டு கலக்கும் விவசாயி!