டெல்லி: ரெம்டெசிவிர் மருந்தின் பயன் குறித்து எந்த ஆதாரமும் இல்லை என்பதால், அது விரைவில் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மருந்து செயல்திறன் குறித்து எந்த ஆதாரமும் இல்லை என்பதால், நோய்த் தொற்றுக்காக பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை நெறிமுறையிலிருந்து விலக்கப்படலாம் என, கங்கா ராம் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் டி.எஸ்.ராணா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது," மருத்துவமனைகளின் நிலவும் சூழ்நிலைகள் காரணமாக, தற்போது ரெம்டெசிவிர் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். அதனால், தற்போது இந்த கரோனா சூழலில் அதன் தேவை அதிகரித்துவிட்டன.
இதனால் அதன் பற்றாக்குறையும் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், அதனை கடத்தி சட்ட விரோதமாக விற்பனை செய்யும் அளவிற்கு வந்துவிட்டது. மேலும், இந்த மருந்தை நியாயமான முறையில் பயன்படுத்துமாறு சுகாதார அமைச்சகம் மருத்துவமனைகளை வலியுறுத்தியது. அதேசமயம் கரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தால் எந்த பலனும் கிடைப்பதாகத் தெரியவில்லை. அதனால் இவை வரும் காலங்களில் நீக்கப்படாலாம்.
தற்போது பரிசோதனையில் இருக்கும் பயன் அளிக்காத மருந்துகளும், பிளாஸ்மா தெரபி(நிறுத்தப்பட்டுள்ளது) அல்லது ரெம்டெசிவிர் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், அவை அனைத்தும் விரைவில் கைவிடப்படலாம்" என்றார்.
இதையும் படிங்க: ’மாநிலங்களுக்கு இதுவரை 21 கோடி தடுப்பூசிகள் விநியோகம்’ - மத்திய அரசு