உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கான பரந்த-ஸ்பெக்ட்ரம் ஆன்டிவைரல் மருந்து தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இதனை எடுப்பதற்காக அந்த அறைக்குச் சென்ற மருத்துவ ஊழியர், அறையின் கதவு உடைந்திருந்ததைக் கண்டு அதிர்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது ஆன்டிவைரல் மருந்துகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு சென்ற மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் தீபக் சேத், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர்,அறையின் பூட்டை உடைந்து உள்ளே நுழைந்து, மருந்தை திருடிக் கொண்டு தப்பிச்செல்வது தெரியவந்தது. இதுகுறித்து
இதுகுறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.