இந்தியாவில் ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த வாரம் ஏர்டெல் நிறுவனம் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை(Airtel New Tariffs) 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியது.
குறைந்த பட்ச ரீசார்ஜ் விலை ரூ. 79 ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.99ஆக உயர்ந்துள்ளது. அன்லிமிடட் கால் மற்றும் தினசரி 1GB டேட்டா கொண்ட 28 நாட்களுக்கான ரீசார்ஜ், முதலில் ரூ.219 இருந்த நிலையில், தற்போது ரூ.265 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் அனைத்து ப்ளான்களின் விலைகளும் உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏர்டெலைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது. அதன்படி ரூ.79 என்று இருந்த திட்டம் உயர்ந்து ரூ.99 ஆகவும், ரூ.149 என்று இருந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.179 ஆகவும் உயர்ந்தன.
இந்நிலையில், ஜியோ நிறுவனமும் தன்பங்கிற்கு, விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஜியோ நிறுவனத்தின் ப்ரிபெய்ட் கட்டணம் 20 முதல் 21 சதவீதம் உயர்கிறது.
அதேவேளை, வோடஃபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்களை ஒப்பிடும்போது ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு குறைவுதான். ஜியோ நிறுவனம் ரூ.129 என்று இருந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.155 என்று மாறியுள்ளது. மேலும் ரூ.149 ஆக இருந்த திட்டம் ரூ.179 ஆக உயர்ந்துள்ளது. இது போன்ற பல திட்டங்களுக்கு ஜியோ விலையை ஏற்றியுள்ளது.
குறைந்த விலை தொலைத்தொடர்பு சேவை என்ற அம்சத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்து, புது புது சலுகைகளை வழங்கிவந்த நிலையில், தற்போது அறிவித்துள்ள விலையேற்றம் ஜியோ வாடிக்கையாளர்களிடம் கவலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : குற்ற வழக்குகள்: வீட்டுக் காவலிலிருந்து தப்பிய 2 தென்கொரியர்கள்!