ETV Bharat / bharat

தெலங்கானா இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி நியமனம்; பாஜக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பின் பின்னணி என்ன?

Akbaruddin Owaisi: தெலங்கானாவில் இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவிப் பிரமாணத்தை, பாஜக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.

Akbaruddin Owaisi
அக்பருதீன் ஒவைசி
author img

By ANI

Published : Dec 10, 2023, 12:25 PM IST

ஹைதராபாத்: நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் 39 இடங்களை வென்ற பி.ஆர்.எஸ் இரண்டாவது இடத்தையும், 8 இடங்களை வென்ற பாஜக 3வது இடத்தையும், ஏஐஎம்ஐஎம் (AIMIM) 7 இடங்களை வென்று 4வது இடத்தையும் பிடித்தது.

இதனையடுத்து கடந்த வியாழனன்று (டிச.07) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 11 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். துணை முதலமைச்சராக மல்லு பாட்டி விக்ரமர்க்கா பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 1999 முதல் 6 முறை எம்ஏல்ஏவாக வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஓவைசியை, இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்படுவதாகச் சட்டமன்றம் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்ஏல்ஏக்கள், பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்தனர்.

  • #WATCH | On AIMIM MLA Akbaruddin Owaisi appointed as Pro-tem Speaker of Telangana Legislative Assembly, BJP leader T Raja Singh says, "It is very unfortunate. After Congress formed the government & Revanth Reddy became the CM, Congress' real face has come to the fore. Every time… pic.twitter.com/nTmGypYD6f

    — ANI (@ANI) December 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அம்மாநில பாஜக தலைவர் கிஷான் ரெட்டி கூறுகையில், “புதியதாகப் பதவி ஏற்றுள்ள ரேவந்த் ரெட்டி, கேசிஆர் போல ஏஐஎம்ஐஎம் கட்சியைப் பார்த்துப் பயப்படுகிறார். பேரவையில் உள்ள மூத்த உறுப்பினர்களைத்தான் சபாநாயகர்களாக நியமிப்பது மரபு.

இதனை மீறிய காரணத்தால் பாஜக எம்எல்ஏக்கள், இடைக்கால சபாநாயகர் முன்பு பதவி ஏற்பதைப் புறக்கணிப்பார்கள். இது குறித்து ஆளுநர் தமிழிசையிடம் முறையிட உள்ளோம். மேலும் ஒரு போதும் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்” என தெரிவித்தார்.

இதேபோல் பாஜக எம்எல்ஏவான ராஜா சிங் கூறுகையில் “உயிருள்ள காலம் வரை நான் ஏஐஎம்ஐஎம் முன்பு பதவி ஏற்றுக்கொள்ள மாட்டேன். முழுநேர சபாநாயகர் நியமிக்கப்பட்ட பின்னர் நான் பதவி ஏற்றுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் இந்துக்களுக்கு எதிராக கருத்துக்கள் கூறிய ஒரு நபரின் முன்னிலையில், எப்படி நான் பதவி ஏற்றுக்கொள்ள முடியும்?" எனத் தெரிவித்தார்.

இருப்பினும் நேற்று முன்தினம் (டிச.08) ஆளுநர் மாளிகையில் இடைக்கால சபாநாயகராக அக்பருதீன் ஒவைசி பதவியேற்றார். அதன் பின்னர், தேர்தலில் வெற்றி பெற்ற எம்ஏல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் சொன்னது போல் பாஜக எம்.ஏ.எல்.ஏ-க்கள் இதனைப் புறக்கணித்துவிட்டனர்.

இதையும் படிங்க: "100 நாட்களில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" - தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.