ETV Bharat / bharat

சிவசங்கருடனான தொடர்பு குறித்து ஒரு புத்தகம் எழுதத் தயார்- ஸ்வப்னா சுரேஷ் - Aswarthamavu is only an elephant

பரபரப்பாக பேசப்பட்ட தங்கக் கடத்தல் வழக்கில் முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கருடனான தொடர்பு குறித்து ஒரு புத்தகம் எழுதத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்
author img

By

Published : Feb 7, 2022, 2:20 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட தங்கக் கடத்தல் வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக அறியப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். இவர், மூத்த ஐஏஎஸ் அலுவலரும் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளருமான சிவசங்கருடனான தொடர்பு குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளருடன் பல தகல்வகளை பகிர்ந்து கொண்டார்.

சிவசங்கருடனான தொடர்பு குறித்து ஒரு புத்தகமே எழுத தான் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். சிவசங்கர் எழுதிய அவரது சுயசரிதையில் (‘Aswathamavu: Verum Oru Aana’ [Aswarthamavu is only an elephant]), ஸ்வப்னா லஞ்சமாக பெற்ற ஒரு ஐ போனை கொடுத்து தன்னை ஏமாற்றியதாக சிவசங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில், ”சிவசங்கர் எனக்கு எதிரி கிடையாது. அவரை என்னால் எதிரியாக பார்க்க முடியாது. ஆனால், என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கும் விதத்தில் அவர் எழுதிய புத்தகத்தில் இருந்தால், சிவசங்கர் பற்றி பல ரகசியத் தகவல்களை நான் வெளியிடுவேன் ” என ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.

“எங்களது குடும்ப பிரச்சினைகள் பற்றி நாங்கள் பகிர்ந்து கொண்டோம். சிவசங்கர் தன் மனைவியுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லை எனக் கூறினார். அவர் எதற்காக என்னைப் பற்றி இந்த மாதிரியாக அவரது புத்தகத்தில் எழுதியுள்ளார் எனத் தெரியவில்லை” என ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

மேலும், “முதலமைச்சர் பற்றிய கருத்துக்களை தெரிவிக்குமாறு விசாரணை மேற்கொண்ட அலுவலர்கள் எனக்கு எந்த விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. எனக்கு தெரிந்தவற்றை மட்டுமே நான் கூறினேன். அலுவல் ரீதியான காரியங்கள் குறித்து மட்டுமே பேசினோம்” எனக் கூறினார்.

Space park-கில் ஸ்வப்னாவின் பணிக்காக தான் பரிந்துரைக்கவில்லை என சிவசங்கர் கூறியுள்ளார். இதற்கு கேள்வியெழுப்பும் வகையில், உயர் அலுவலர் ஒருவர் தன்னுடைய திறமையைப் பார்த்து இந்த பணிக்காக பரிந்துரைத்ததாக ஸ்வப்னா கூறினார்.

”ஒரு பெண்ணாக நாம் அதிகப்படியான பாதிப்புக்கு ஆளானேன். அதில் சிவசங்கருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நான் அவரால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் எல்லோருமே என்னை தவறான பெண் எனக் கூறுகின்றனர்.

நான் இதிலிருந்து மீண்டு வர முயற்சித்து வருகிறேன். எனது தாயார் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். நான் வேறு பணிக்குச் செல்ல முயற்சித்தாலும் என்ன மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை. சூழல் இப்படி இருக்கும் போது, சிவசங்கர் எழுதிய இந்த புத்தகம் எனக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிவசங்கர் எங்கள் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராகவே இருந்தார். நடந்த எல்லா நிகழ்வுக்கும் அவர் தான் தொடக்கப் புள்ளி. அப்படியிருக்கும் பட்சத்தில் நாங்கள் ஏன் அவரை தவறாக புரிந்து கொள்ளப் போகிறோ. ஐ போன் கொடுத்து சிவசங்கரை ஏமாற்ற வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை. நான் அவரது புத்தகத்தைப் படிக்கவில்லை. அதனால் எனக்கு அது பற்றிய தகவல்கள் தெரியாது.” என ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கேரள தங்கக் கடத்தல் வழக்கு: மத்திய அரசு நிறுவன அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.