ETV Bharat / bharat

மூச்சு திணறி உயிரிழந்த எலி... உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிப்பு

author img

By

Published : Dec 2, 2022, 8:58 AM IST

உத்தரபிரதேச மாநிலத்தில் எலியை கொன்றதாக போடப்பட்ட வழக்கில் உடற்கூராறு ஆய்வில் முச்சு திணறி எலி இறந்தது தெரியவந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் எலி கொலை செய்யப்பட்ட வழக்கு: எலி மூச்சு திணறி இறந்ததாக அறிக்கை

உத்தரபிரதேச மாநிலம் பிரெய்லி மாவட்டத்தில் இந்திய விலங்கு நல வாரியத்தின் விலங்கு நல அதிகாரி விகேந்திர ஷர்மா மனோஜ் குமார் என்பவருக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில் மனோஜ் எலியின் வாலில் நூலில் கற்களைக் கட்டி வாய்க்காலில் வீசியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, வாய்க்கால் நீரில் மூழ்கி எலி இறந்துள்ளது.

நவம்பர் 25ஆம் தேதி எலியின் உடல் ஐவிஆர்ஐக்கு கொண்டு வரப்பட்டதாக டாக்டர் கே.பி.சிங் தெரிவித்தார். டாக்டர் அசோக்குமார் மற்றும் டாக்டர் பவன்குமார் ஆகியோர் இறந்த உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனையில் எலியின் நுரையீரல் வீங்கியிருப்பது தெரிந்தது. எலியின் கல்லீரலிலும் சில பிரச்சனைகள் இருந்தன.

அதன் பிறகு நுரையீரலின் நுண்ணோக்கி பரிசோதனை செய்யப்பட்டது. நுண்ணோக்கி பரிசோதனையில், நுரையீரலில் வடிகால் நீரின் அழுக்கு எதுவும் இல்லை. எலி மூச்சுத் திணறி இறந்தது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

இதையும் படிங்க: சுனந்தா புஷ்கர் மரண வழக்கு - சசிதரூர் விடுதலையை எதிர்த்து டெல்லி போலீசார் மேல்முறையீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.