டெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக விளங்கி வருகிறார். இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோ மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துகிறார்கள் எனவும் ராஷ்மிகா அவரது X தளத்தில் பகிர்ந்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
-
ऐक्ट्रेस @IAmRashmika की AI Generated Deep Fake वीडियो का संज्ञान लेते हुए दिल्ली महिला आयोग ने दिल्ली पुलिस को नोटिस जारी किया है। अब तक इस मामले में कोई गिरफ़्तार नहीं हुआ है।
— Swati Maliwal (@SwatiJaiHind) November 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ये नक़ली वीडियो बनाने वाले के ख़िलाफ़ सख़्त कार्यवाही सुनिश्चित होनी चाहिए। pic.twitter.com/Lp5Ah4cC1b
">ऐक्ट्रेस @IAmRashmika की AI Generated Deep Fake वीडियो का संज्ञान लेते हुए दिल्ली महिला आयोग ने दिल्ली पुलिस को नोटिस जारी किया है। अब तक इस मामले में कोई गिरफ़्तार नहीं हुआ है।
— Swati Maliwal (@SwatiJaiHind) November 10, 2023
ये नक़ली वीडियो बनाने वाले के ख़िलाफ़ सख़्त कार्यवाही सुनिश्चित होनी चाहिए। pic.twitter.com/Lp5Ah4cC1bऐक्ट्रेस @IAmRashmika की AI Generated Deep Fake वीडियो का संज्ञान लेते हुए दिल्ली महिला आयोग ने दिल्ली पुलिस को नोटिस जारी किया है। अब तक इस मामले में कोई गिरफ़्तार नहीं हुआ है।
— Swati Maliwal (@SwatiJaiHind) November 10, 2023
ये नक़ली वीडियो बनाने वाले के ख़िलाफ़ सख़्त कार्यवाही सुनिश्चित होनी चाहिए। pic.twitter.com/Lp5Ah4cC1b
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ராஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோவை தொடர்ந்து சச்சின் டெண்டுகரின் மகள், நடிகை கத்ரினா கைஃப் ஆகியோரின் புகைப்படங்களும் டீப்ஃபேக் செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பரவியது.
இதனிடையே, தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி போலி வீடியோ பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், போலி வீடியோக்கள் குறித்து புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், ராஷ்மிகாவின் போலி வீடியோ தொடர்பாக விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையத்தின் (Delhi Commission for Women) தலைவர் ஸ்வாதி மலிவால், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக வெளியான செய்திகள் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறை சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் செய்யப்பட்ட வீடியோவில் உள்ள உண்மையான நபர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார். அவர் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் சிலம்பரசனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!