பகாஹா(பிகார்): பர்சா பஞ்சாரி கிராமத்தில் அரியவகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அரியவகை மீன் மாவட்டம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விசித்திரமான மீனுக்கு நான்கு கண்கள் மற்றும் விமானம் போன்ற துடுப்புகள் உள்ளன. இதனைக் காண ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.
தென் அமெரிக்காவில் இந்த வகை மீன்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஹரஹா நதியில் காணப்படும் ’சக்கர்மவுத் கேட்ஃபிஷ்’ அல்லது பனாரஸின் கங்கைக்குப் பிறகு பகாஹாவின் ஹராஹா நதியில் காணப்படும் ’ப்ளெகோஸ்டோமஸ் கேட்ஃபிஷ்’ எனும் இந்த வகை மீன் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதன்கிழமை காலை, பர்சா பஞ்சாரி கிராமம் அருகே உள்ள ஹர்ஹா ஆற்றில் மீன்பிடித்தபோது மீனவர்களின் வலையில் சிக்கிய இந்த மீன், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பகாஹா மாவட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய வகை மீன்களை மீன்வளத்தில் அலங்காரத்திற்காக வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஹர்ஹா நதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பிளெகோஸ்டோமஸ் கேட் மீன்கள் வால்மீகி புலிகள் காப்பகத்தின் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அசோக் சாஹ்னி, ஹிட்லர் சிங், பவன் திவாரி மற்றும் நன்ஹே சிங் ஆகியோர் பஞ்சாரி கிராமத்தின் வழியாக செல்லும் ஹர்ஹா கால்வாயில் மீன்பிடிக்கும்போது இந்த விசித்திரமான மீனைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. இந்த விசித்திரமான மீனைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: முதன்முறையாக இந்தியாவில் நடைபெறும் 'மோட்டோ ஜிபி' பைக் பந்தயம்