புதுச்சேரி: கிழக்குக் கடற்கரைச் சாலையில் 2007ஆம் ஆண்டு 23 கோடி ரூபாய் செலவில், காமராஜர் மணி மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது நிறைவடைய உள்ள கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமி இன்று அலுவலர்களுடன் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”காமராஜரின் எண்ணம்போல், மாணவர்களுக்குப் பயன்பெறும் வகையில் மணிமண்டபம் அமையும்.
காமராஜரின் பிறந்தநாளன்று மணிமண்டபம் திறப்பு
அரசு சார்பில் மாணவர் சேர்க்கைக்கான செண்டாக் அலுவலகம், நூலகம், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றின் அருங்காட்சியகம் ஆகியவை அமையவுள்ளன. காமராஜரின் பிறந்தநாளன்றே மணிமண்டபம் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன” என்றார்.
இதையும் படிங்க: மக்கள் பணியில் புதிய அமைச்சர்கள் வெற்றிகரமாக செயலாற்ற வாழ்த்துகள்: ஆளுநர் தமிழிசை