இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்துவரும் நிலையிலும், டெல்லியில் கரோனா தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக அண்டை மாநிலங்களிலும் கரோனா பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில், மூத்த நிர்வாகிகள், சுகாதார அலுவலர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர், டெல்லியிலிருந்து நொய்டா வருபவர்களில் சிலருக்கு (ரேண்டம் முறையில்) கரோனா பரிசோதனை செய்ய மாவட்ட மாஜிஸ்திரேட் சுஹாஸ் எல் ஒய் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, இன்று காலை முதல் மாவட்ட எல்லையில் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ரேபிட் ஆன்டிஜன் முறையில் வாகன ஒட்டிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கரோனா இல்லாத நபர்களுக்கு மட்டுமே நொய்டாவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. கரோனா உறுதிசெய்யப்படும் நபர்கள் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
டெல்லியில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதிமுதல் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, நவம்பர் மாதத்தில் தினசரி 8,000த்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதிசெய்யப்படுகிறது.
இதையும் படிங்க: 30 நிமிடங்களில் முடிவுகளை சொல்லும் புதிய கரோனா பரிசோதனை கருவி