மகாராஷ்டிரா அரசின் உள்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் உள்ளார். மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்பீர் சிங், 'உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து தன்னிடம் கொடுக்கும்படி வற்புறுத்தியதாக' குற்றஞ்சாட்டி மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்று எழுதினார். இந்த விவகாரம் மகாரஷ்டிரா அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ”பரம்பீர் சிங் கடிதம் தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் முழு விசாரணை நடத்தவேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பே இப்படி சீரழிந்துள்ளதால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக விரைவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'பெரும்பான்மையான மழைநீர் வீணடிக்கப்படுவது கவலைக்குரியது' - பிரதமர் மோடி