பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காப்பகம், வகைப்படுத்தல் மற்றும் போர் செயல்பாட்டு வரலாறுகளின் தொகுப்புகள் வெளியீடு குறித்த புதிய கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேவைகள், ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை செயல்படுகின்றன. இவை தமது போர் நாட்குறிப்புகள், நடவடிக்கைகளின் கடிதங்கள் மற்றும் செயல்பாட்டு பதிவு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வரலாற்றுப் பிரிவுக்கு மாற்றுவதற்கு இந்தக் கொள்கை வகை செய்கிறது.
இந்தப் புதிய கொள்கையின்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். போர் செயல்பாட்டு வரலாறுகளின் தொகுப்பிற்காக, இந்தக் குழுவில், சேவைகள், வெளியுறவு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகளும், தேவைப்பட்டால் முக்கிய இராணுவ வரலாற்றாசிரியர்களும் இக்குழுவில் இடம் பெறுவார்கள்.
போர் நடவடிக்கைகள் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் மேற்கூறிய குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பிறகு, பதிவுகள் சேகரிப்பு மற்றும் தொகுப்பு மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம்!