ETV Bharat / bharat

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்.. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம்! - யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த்

Rajinikanth Touch Yogi Feet: உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களை கொண்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Rajinikanth touch uttar pradesh cm Yogi Adityanath feet fans criticize over social media
Rajinikanth touch uttar pradesh cm Yogi Adityanath feet video viral over social media
author img

By

Published : Aug 20, 2023, 9:54 AM IST

Updated : Aug 20, 2023, 10:17 AM IST

யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கும் வீடியோ

லக்னோ (உத்தர பிரதேசம்): தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் (Jailer) படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்னதான நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குப் பயணம் சென்றார். கரோனாவிற்கு முன்னதாக அவரது ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும் அவர் இமயமலை செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அடுத்ததாக ஜார்கண்ட் சென்றார். இதனையடுத்து ரஜினிகாந்த் இல்லாமலேயே ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது.

ஜார்கண்ட்டின் சின்னமாஸ்தா கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த், யசோதா ஆசிரமத்தில் ஒரு மணிநேரம் தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் செல்ல உள்ளதாகவும், அங்கு யோகி ஆதித்யநாத் உடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் சிறப்பு திரையிடலுக்காக நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை லக்னோ சென்றார். பின்னர் அவர் உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா உடன் ஜெயிலர் படத்தைப் பார்த்தார். பின்னர் அவரது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவா நடித்த "ஜெயிலர்" திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டார். காவல்துறை அதிகாரிகளின் எளிமையான வாழ்க்கையை இது சித்தரிக்கிறது. இந்தப் படத்தில் சிறப்பாகப் பணியாற்றிய நடிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் வாழ்த்துக்களும்.” என பதிவிட்டிருந்தார்.

  • लखनऊ में पुलिस विभाग के अधिकारियों के साधारण जीवन को रेखांकित करती तमिल फिल्म "जेलर" के विशेष स्क्रीनिंग पर भारतीय सिनेमा के सुपरस्टार अभिनेता श्री रजनीकांत जी "थलाइवा" के साथ सम्मिलित हुआ।
    इस फिल्म में बेहतरीन अभिनय के लिए सभी कलाकारों को हार्दिक बधाई एवं शुभकामनाएं।

    இந்திய… pic.twitter.com/yv3p0zhxO2

    — Keshav Prasad Maurya (@kpmaurya1) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா உடன் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். ரஜினிகாந்த்தை வரவேற்பதற்காக யோகி ஆதித்யநாத் வாசலில் நின்றிருந்தார். அவரை கண்டதும் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து வணங்கினார்.

இதனைத் தொடர்ந்து, வீட்டுக்குள் சென்ற ரஜினிகாந்த், முதலமைச்சருக்கு நினைவுப் பரிசை வழங்கினார். பின்னர், ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இணைந்து முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து உத்தர பிரதேச முதலமைச்சர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஆகஸ்ட் 20) அயோத்தி செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

  • प्रख्यात फिल्म अभिनेता श्री रजनीकांत जी से आज लखनऊ स्थित सरकारी आवास पर शिष्टाचार भेंट हुई।@rajinikanth pic.twitter.com/HIByc0aOO0

    — Yogi Adityanath (@myogiadityanath) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் காலில் விழுந்தது குறித்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

  • This is happening at a time where the UP Muslim population directly accuses the CM of suppressing them in every way possible .

    Rajini sir stands for all . Meeting is fine , but what’s the need to touch his feet ? Every right thinking citizen will ask this question bro ! https://t.co/yp2v0WEf4G

    — Prashanth Rangaswamy (@itisprashanth) August 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், பலர் காலா படத்தில் ஹரி தாதா அவரது பேத்தியை காலாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ளச் சொல்லும் காட்சியில், காலாவாக நடித்திருந்த ரஜினிகாந்த் காலில் விழ வேண்டாம் என கூறி இருப்பார். படத்தின் இந்த காட்சியை யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்ததுடன் ஒப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த் அவரை விட 21 வயது குறைவானவர் காலில் விழுந்ததாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • கோரக்நாத் மடத்தின் தலைமை மதகுருவும், உத்தரப்பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத்யிடம் ஆசிர்வாதம் பெற்ற தலைவர் ரஜினிகாந்த்🙏🙏🙏#ThalaivarRajinikanth @rajinikanth @myogiadityanath pic.twitter.com/mCvHCgaAvB

    — Deepu 🇮🇳 (@Deepu06407071) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேசமயம், யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் ஆவதற்கு முன்னர் மடாதிபதியாக இருந்தவர். அதனால் மரியாதை செலுத்தும் விதமாக அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்ததாகக் கூறி, ரஜினியின் செயலுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Jailer box office: விரைவில் ரூ.500 கோடியை நெருங்கும் ஜெயிலர்...

Last Updated : Aug 20, 2023, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.