ETV Bharat / bharat

ஆந்திராவில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு! - AP CID

Rajinikanth gave brave to Chandrababu's son Lokesh: திறன் மேம்பாட்டுக் கழக வழக்கில் கைதாகி உள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு, ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 3:44 PM IST

Updated : Sep 13, 2023, 3:54 PM IST

விஜயவாடா (ஆந்திரா): ஆந்திர அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 371 கோடி ரூபாய் வரை ஊழல் புரிந்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி காவல் துறையினர் கடந்த செப்டம்பர் 9 அன்று கைது செய்தனர். இதனையடுத்து அவர் ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் என்பவருக்கு தொலைபேசி வாயிலாக தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். அப்போது, லோகேஷிடம் தொலைபேசி வாயிலாக பேசிய ரஜினிகாந்த், “எனது நண்பர் சந்திரபாபு நாயுடு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் சிறந்த போராளி.

இந்த பொய் வழக்குகளும், சட்டவிரோத கைதுகளும் அவரை ஒன்றும் செய்யாது. எனவே, நீங்கள் தைரியமாக இருங்கள். எனது அருமை நண்பரான சந்திரபாபு நாயுடு தவறு செய்ய மாட்டார். அவரது நற்செயல்களும், தன்னலம் அற்ற பொது சேவையும் அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும்” என நம்பிக்கை அளித்து உள்ளார்.

முன்னதாக, தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாடுக் கழகத்தின் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 371 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக ஆந்திர சிஐடி காவல் துறையினரால் நந்தியாலா பகுதியில் வைத்து கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் அன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் பதற்றம் நிலவியதை அடுத்து இரு மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட சேவைகளும் அன்று நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் (செப் 10) சந்திரபாபு நாயுடு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சிஐடி காவல் துறையினர் தங்கள் தரப்பு ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். அதேநேரம், சந்திரபாபு நாயுடுவை ஜாமீனில் கொண்டு வர அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

ஆனால், அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை செப்டம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனால் அவர் ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, சிறையில் பாதுகாப்பு குறைகள் உள்ளதாகவும், அவரது உடல் நிலையைக் கருதியில் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர் சித்தார்த்த லுத்ரா விஜயவாடா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பான விசாரணை கடந்த இரண்டு நாட்களாக நடந்து வந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக்காவல் மனுவை விஜயவாடா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக் காவல் மனு ரத்து!

Last Updated : Sep 13, 2023, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.