ETV Bharat / bharat

அதிகாரத்தை நோக்கிய பயணம் - வசுந்தரா ராஜே 2.0! - வசுந்தரா ராஜே

ஜெய்ப்பூர்: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மார்ச் 2ஆம் தேதி தேசிய தலைவர் நட்டா, ராஜஸ்தானுக்கு செல்லவுள்ளார். வரும் தேர்தலில், பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக ராஜேவை அறிவிக்க வைப்பதற்காக அவர் இந்த யாத்திரையை மேற்கொள்ளவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

வசுந்தரா ராஜே
வசுந்தரா ராஜே
author img

By

Published : Mar 1, 2021, 5:07 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக கோஷ்டி பூசலால் சிக்கி தவித்துவருகிறது. பிரச்னையை மேலும் சிக்காலாக்கும் வகையில் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி மத யாத்திரை ஒன்றை தொடங்கவுள்ளார். மாநிலத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில்கள் வழியே அந்த யாத்திரை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, கோவிந்த் தேவ் மற்றும் காலி அனுமான் கோயிலுக்கு நேற்று சென்று அவர் வழிபாடு மேற்கொண்டார். அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள், 'ராஜஸ்தான் என்றால் வசுந்தரா' என கோஷம் எழுப்பினர். ராஜே தலைமையில் நடைபெறவுள்ள மிகப் பேரிய யாத்திரை இதுவாக இருக்கும் என பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஆதி பத்ரி கோயிலில் தொடங்கப்படும் யாத்திரை, ஸ்ரீ நாத் உள்பட பல்வேறு கிருஷ்ணர் கோயில்களை தாண்டி செல்லவுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் பேரணியில் 800 முதல் 900 வாகனங்கள் பங்கேற்கவுள்ளன. ஆனால், சமீபத்தில் மாநிலத்திற்கு சென்ற பாஜக பொறுப்பாளர் அருண் சிங், ராஜே இது போன்ற யாத்திரையை திட்டமிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மத யாத்திரைகளை சாமியார்களும் சன்யாசிகளும் தான் மேற்கொள்வர்" என்றார். இதற்கிடையே, டெல்லிக்கு சென்ற பாஜக மாநில தலைவர் சதீஷ் பூனியா, நான்கு மாவட்டங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் மற்றும் மாநில பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மார்ச் 2ஆம் தேதி தேசிய தலைவர் நட்டா, ராஜஸ்தானுக்கு செல்லவுள்ளார். வரும் தேர்தலில், பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக ராஜேவை அறிவிக்க வைப்பதற்காக அவர் இந்த யாத்திரையை மேற்கொள்ளவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து அருண் சிங்கிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "நாட்டில் நடைபெற்ற பல தேர்தல்களில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல்தான் பாஜக வென்றுள்ளது. எனவே, முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதற்கான காரணம் இப்போது ஏன் வந்தது" என பதிலளித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே, கட்சியின் பல கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ராஜே தவிர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.