ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக அப்பகுதி போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இதனால் தௌசா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நேற்றிரவு (ஆக 4) சோம்நாத் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக ஆள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர். முதல்கட்ட தகவலில், கைது செய்யப்பட்ட இருவரில் ஜிதேந்திர சிங் என்பவர் தௌசாவில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் காவலராக பணியாற்றிவருபவர்.
இவர் கடந்த 15 நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பகலில் காவலராக பணிபுரிந்துவிட்டு, இரவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில், ஜிதேந்திர சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்படி நடவடிக்கை அடுத்தக்கட்ட எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கு - யங் இந்தியா அலுவலகத்தில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை