டெல்லி: பெண்களுக்கு எதிராக அதிகமாக குற்றங்கள் நிகழும் மாநிலமாக காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலம் திகழ்வதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2019 - 2020 ஆண்டில் பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நிகழ்ந்த மாநிலங்களில் முதலாவதாக ராஜஸ்தான் திகழ்கிறது. குறிப்பாக 2020ஆம் ஆண்டில் மட்டும் 50 சதவீதம்வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அங்கு அதிகரித்துள்ளது.
பொதுமக்களின் நலன் மீது பொறுப்பு இல்லாமல் தங்களது ஆட்சியை காப்பாற்றிக்கொள்வதிலேயே ஆளும் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்துகிறது. அங்கு தற்போது அராஜக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
2019-2020 ஆண்டுகளில் நடைபெற்ற குற்றங்களில் ராஜஸ்தான் மாநிலம் எதிர்பாராதவிதமாக முதல் இடத்தை பிடித்துள்ளது. பணநாயகத்துக்கு எதிராக அங்கே எதுவும் செயல்படுவதில்லை.
மாநிலத்தில் வாழும் ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டலுக்கு உள்ளானவர்களின் குரல்களை கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தல் வன்முறை: உ.பி. அரசை சாடும் ராகுல், பிரியங்கா