ETV Bharat / bharat

ராகுலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அசோக் கெலாட்: மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு! - மூன்று வாரங்களில் உரிய விளக்கம் வேண்டும்

Ashok Gehlot Judiciary Remark: நீதித்துறை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மூன்று வாரங்களுக்குள் அவதூறு கருத்து குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராகுலை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அசோக் கெலாட்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 10:59 PM IST

ராஜஸ்தான்: தேர்தல் நேரங்களில் ஆளும் கட்சிக்கு நெருக்கடி உண்டாக்கும் வகையில் எதிர்கட்சிகள் அவ்வப்போது விமர்சனங்களை வைப்பது அரசியல் வட்டாரங்களில் இயல்பான நடவடிக்கை. ஆளும் கட்சிகள் தேர்தல் நேரங்களில் பரப்புரைகளைக் கடந்து, பொது இடங்களிலும் தங்கள் கட்சி சார்ந்தவர்கள் பொது கருத்து தெரிவிப்பதில் அதீத கவனத்துடன் இருக்க வலியுறுத்துவர்.

பரப்புரைகளில் எதிர் கட்சியோ, ஆளும் கட்சியோ, பொது கருத்துகளை தெரிவிப்பதில் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு, தொடர்ந்து நீதிமன்றங்கள் வலியுறுத்தி வருகின்றன. பொது கருத்தில் சர்ச்சைக்கு உள்ளாகும் வீரியம் எதுவரையில் இட்டுச்செல்லும் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் ராகுல் காந்தியின், மோடி குறித்த சர்ச்சை கருத்து அமைந்தது.

இத்தனை வீரியங்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்குவது சர்வசாதாரணமாகி விட்டது. வயநாடு எம்.பியான ராகுல் காந்திக்கு அடுத்து தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட். நீதிமன்றம் குறித்து அவர் தெரிவித்த கருத்தின் மூலம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், “இன்றைய காலகட்டங்களில் நீதிமன்றங்களில் ஊழல் தலைதூக்கியுள்ளது. மேலும் வழக்கறிஞர்களின் பணபலத்தால் தீர்ப்பு, அவர்களுக்கு ஏற்றவாரு நிறைவேற்றப்படுகின்றது" என்று கருத்து தெரிவித்தது நீதிமன்றம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பூதாகரமாகியுள்ளது.

இந்த கருத்திற்கு வழக்கறிஞர்கள் பலரும் அவர்களின் எதிர்பை தெரிவித்து நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்கள் குறித்து முதலமைச்சர் கூறிய கருத்துகளில் இருந்து பின் வாங்க வேண்டும் என்றும், இதற்காக அவர் அனைத்து வழக்கறிஞர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதலமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வழக்கறிஞர் சிவ்சரண் குப்தா, நீதிமன்றம் மற்றும் சட்டங்களை முதலமைச்சர் அவமதித்தாக பொது நல வழக்கை ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள் ஸ்ரீவஸ்தவா மற்றும் அசுதோஷ் குமார், நீதிமன்றம் குறித்து முதலமைச்சர் அசோக் கெலாட் அவதூறு கருத்து தெரிவித்தது, நீதிமன்றங்களின் பெருமையை அவமதிக்கும் செயலாகும். மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலமைச்சர் அசோக் கெலாட், இது குறித்து உரிய விளக்கங்களை விரிவாக மூன்று வாரங்களில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட், “நீதிமன்றத்தின் கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல. நீதிமன்றங்களில் ஊழல் நடக்கின்றது என முன்னாள் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் முன்னதாக கருத்து தெரிவித்து வந்துள்ளனர். அதன் அடிப்படையிலே இந்த கருத்து பகிரப்பட்டது. இதை எதிர்கட்சிகள் திசை திருப்புகின்றனர்” எனத் தன் X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

நாட்டின் மூன்றாவது தூணாக, உயரிய இடத்தில் இருக்கும் நீதித்துறை குறித்து சாமனிய மக்களே இப்படியான கருத்தை தெரிவிக்க யோசிக்கும் நிலையில், பொது மக்களின் மதிப்புமிக்க இடத்தில் அரசாளும் பதவியில் இருக்கும் முதலமைச்சர், அவரின் பொறுப்பை உணர்ந்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என பலரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: One Nation One Election: ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை வரவேற்கிறோம்’ - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.