ஹைதராபாத்: தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தேர்தல் நடைபெறும் தேதிகளைக் கடந்த அக்.09-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
-
Polling date for #RajasthanElection2023 shifted to 25th November from 23rd November due to "largescale wedding/social engagement" on that day pic.twitter.com/ERWaMLM8ke
— Spokesperson ECI (@SpokespersonECI) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Polling date for #RajasthanElection2023 shifted to 25th November from 23rd November due to "largescale wedding/social engagement" on that day pic.twitter.com/ERWaMLM8ke
— Spokesperson ECI (@SpokespersonECI) October 11, 2023Polling date for #RajasthanElection2023 shifted to 25th November from 23rd November due to "largescale wedding/social engagement" on that day pic.twitter.com/ERWaMLM8ke
— Spokesperson ECI (@SpokespersonECI) October 11, 2023
சத்தீஸ்கரில் முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 17-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23-ஆம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 7-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ராஜஸ்தானில் நவம்பர் மாதம் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தேர்தல் நடைபெறும் 23-ஆம் தேதி முகூர்த்த தினம் என்பதால் அதிகளவில் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்வுகள் நடைபெறும். இதனால் பெரும்பாலான மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
எனவே, தேர்தல் நடைபெறும் நாளை மாற்ற வேண்டும் என பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் நவம்பர் 23லிருந்து நவம்பர் 25-ஆம் தேதிக்கு மாற்றப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறும் தேதி மாற்றப்பட்ட நிலையில், சுபமுகூர்த்த நாளென்பதால் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.