ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தார்ஷாஹர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலின் 3ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் சர்மா முன்னிலையில் உள்ளார். இந்த வாக்குஎண்ணிக்கை இன்று (டிசம்பர் 8) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதன்பின் காலை 10 மணிக்கு அளவிலேயே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் 43.5 விழுக்காடு வாக்குகளையும், பாஜக வேட்பாளர் 30.7 விழுக்காடு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மற்ற கட்சிகள் 22.3 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளன. மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இருப்பினும் மறைந்த அமைச்சர் பன்வர் லால் சர்மாவின் மகன் அனில் சர்மாவுக்கு தொகுதி மக்கள் ஆதரவு அளித்துவருவது வாக்கு எண்ணிக்கையில் தெரிகிறது. சிட்டிங் எம்எல்ஏ பன்வர் லால் சர்மா காலமானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தமாக 2,80,000 வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இதையும் படிங்க: "மவுன பிரசாரம்" - காங்கிரஸ் தோல்விக்கு காரணமா?