நாடு முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத்தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அதில், 'என்னுடைய கோவிட்-19 பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை, நன்றாக இருக்கிறேன். கோவிட் நெறிமுறையைப் பின்பற்றி வீட்டில் என்னை நானே தனிமைப் படுத்திக்கொண்டு பணியாற்றுவேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அவரது மனைவி சுனிதாவிற்கு நேற்று (ஏப். 28) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.