ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மாநிலத்தின் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.10), ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வாசிக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக உள்ள முதலமைச்சர் அசோக் கெலாட், காலை 11 மணியளவில் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.
சுமார் 8 நிமிடங்களுக்குப் பிறகு, அசோக் கெலாட்டின் அருகில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், முதலமைச்சருடன் அமைதியாக பேசினார். இதனையடுத்துதான், முதலமைச்சர் அசோக் கெலாட் வாசித்த பட்ஜெட், கடந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் என தெரிய வந்துள்ளது. இதனால் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
அப்போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் குலாப் சந்த் கடாரியா, பட்ஜெட்டை வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்குமாறு சபாநாயகர் சிபி ஜோஷியிடம் முறையிட்டார். ஆனால், இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் அவையில் அமளி ஏற்பட்டது. எனவே அவை அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கூடிய அவையில் பேசிய அசோக் கெலாட், “நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த பட்ஜெட்டில் தவறுதலாக கூடுதலான பக்கங்கள் இணைக்கப்பட்டு விட்டன. இது மனிதத்தவறு. மேலும் இதுபோன்ற தவறு, வசுந்தர ராஜே முதலமைச்சராக இருந்தபோது கூட ஒரு முறை நடந்துள்ளது” என கூறினார். ஆனால், இதற்கு வசுந்தர ராஜே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார்.
-
भाजपा सिर्फ़ यह दिखाना चाहती है कि वह राजस्थान के विकास और तरक्की के खिलाफ है। इनका मन-गढ़ंत आरोप कि बजट लीक हो गया यह दर्शाता है कि बजट को भी यह अपनी ओछी राजनीति से नहीं छोड़ेंगे। 'बचत, राहत, बढ़त' में एक ही बाधा है - भाजपा।
— Ashok Gehlot (@ashokgehlot51) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">भाजपा सिर्फ़ यह दिखाना चाहती है कि वह राजस्थान के विकास और तरक्की के खिलाफ है। इनका मन-गढ़ंत आरोप कि बजट लीक हो गया यह दर्शाता है कि बजट को भी यह अपनी ओछी राजनीति से नहीं छोड़ेंगे। 'बचत, राहत, बढ़त' में एक ही बाधा है - भाजपा।
— Ashok Gehlot (@ashokgehlot51) February 10, 2023भाजपा सिर्फ़ यह दिखाना चाहती है कि वह राजस्थान के विकास और तरक्की के खिलाफ है। इनका मन-गढ़ंत आरोप कि बजट लीक हो गया यह दर्शाता है कि बजट को भी यह अपनी ओछी राजनीति से नहीं छोड़ेंगे। 'बचत, राहत, बढ़त' में एक ही बाधा है - भाजपा।
— Ashok Gehlot (@ashokgehlot51) February 10, 2023
மேலும், பட்ஜெட் நகல் அமைச்சரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிகள் இருக்கும்போது, அதனை அரசு அலுவலர்கள் வைத்திருந்தது சட்ட விதிகளுக்கு புறம்பானது என பாஜகவினர் குற்றம் சாட்டினர். இதற்கு, ‘ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு பாஜக எப்போதும் தடையாக இருப்பதை இது காட்டுகிறது’ என அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் பால் விலை உயர்வு ஏன்?: மத்திய அரசு புது விளக்கம்