ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் நேற்று(பிப்.24) 55 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதுகுறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. அசைவுகள் கேமரா மூலம் கொண்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், "சிறுவன் 40 அடி ஆழத்தில் உள்ளான். மீட்பதற்கான முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழு முழூ வீச்சில் செயல்பட்டுவருகிறது. இந்தப் பணியை தண்டராம்கார் எம்எல்ஏ சவுத்ரி வீரேந்திர சிங், மாவட்ட ஆட்சியர் அவிச்சல் சதுர்வேதி, காவல் ஆணையர் குன்வர் ராஷ்டிரதீப் ஆகியோர் உடனிருந்து கவனித்துவருகின்றனர். சிறுவன் மயக்கமடையவில்லை, குரல் கொடுக்கிறான். விரைவில் மீட்கப்படுவான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தைகள் விழுவது வாடிக்கையாகிவருகிறது
முன்னதாக நேற்று முன்தினம் மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 16 மணிநேர போராட்டத்திற்கு பின்பு மீட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திறந்த வெளியில் இருக்கும் ஆழ்துளைக் கிணறு - நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்