ETV Bharat / bharat

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்று தமிழக வீராங்கனை அசத்தல்! ஆளுநர் உள்ளிட்டோர் வாழ்த்து! - raj bhavan

raj bhavan:பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றததற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

raj bhavan
தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 9:31 AM IST

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் (ISSF) உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சூடு வீராங்கனை தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் 252.2 புள்ளிகள் குவித்து இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்க பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பிரான்சின் ஓசியான் முல்லர் 251.9 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், சீனாவின் ஜியாலே ஜாங் 229 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) இளவேனில் வெற்றி பெற்ற செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பாராட்டி இருந்தது. இந்நிலையில் தமிழக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், "ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஐ.எஸ்.எஸ்.எப் உலக‌ கோப்பை 2023 மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் சிறப்பான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • Hearty congratulations to shooter Elavenil Valarivan on winning Gold in women's 10 m air rifle event at ISSF World Cup 2023 in Rio de Janeiro. The entire nation is proud of your phenomenal performance.#ISSFWorldCup pic.twitter.com/yXQDcXbcV8

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:பிரதமர் பிறந்தநாளில் டீ, சமோசா விற்று புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் நூதன ஆர்ப்பாட்டம்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற உலகக் கோப்பை 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இளவேனில் வாலறிவனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2019 ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை…

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2019ஆம் ஆண்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ள தங்க மங்கை இளவேனில் வாலறிவன் தொடர்ந்து வெற்றிகளை குவித்து இந்தியாவின் நம்பிக்கையாக திகழ வாழ்த்துகிறேன். அதே போல யூரோப்பில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ் சோப்ராவிற்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : Parliament Special Session : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று தொடக்கம்..! முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.